2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பல்கலைக்கழகத்தில் உபவேந்தரைத் தீயிட்டு எரித்த மாணவன்

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 28 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 மத்திய பிரதேச மாநிலத்தில், தனியார் பல்கலைக்கழகமொன்றின் உபவேந்தர் மாணவனால் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தூரில் இயங்கிவரும் மருத்துவப் பல்கலைக்கழமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று குறித்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பழைய மாணவனொருவன் தனது சான்றிதழைத் தருமாறு நிர்வாகத்திடம் கேட்டுள்ளதாகவும், எனினும் குறித்த நிர்வாகம் சான்றிதழைத் தர மறுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவன் அப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் வைத்து  உபவேந்தரைப் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளான் எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் படுகாயங்களுக்குள்ளான உபவேந்தர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு  கடந்த 5 நாட்களாகச்  சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த மாணவனைக் கைது செய்துள்ள பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .