2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பஸ் பிரேக்கால் சாரதி பணிநீக்கம்

Freelancer   / 2023 ஜூலை 20 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் கீழுள்ள  பேருந்து ஒன்று திருநெல்வேலி - நாகர்கோவில் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. அதன் சாரதி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அதே பேருந்தில் பணியாற்றி வருகின்றார்.

இந்தநிலையில் இந்த பேருந்து பழுதாகி கடந்த சில நாட்களாக பாதி வழியிலேயே நின்று விடுகின்றது. இதுதொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு சாரதி கொண்டுவந்துள்ளார். எனினும், அதிகாரிகள் பழுதை நீக்க முன்வரவில்லை.

 ஒருநாள் திடீரென பிரேக் பிடிக்கவில்லை. இதனால் கடுப்படைந்த சாரதி, அந்த பேருந்தை போக்குவரத்து அலுவலகம் முன்பு நிறுத்திவிட்டார். அங்கிருந்த அதிகாரியிடம் பேருந்தின் நிலை குறித்து புகார் கொடுத்துள்ளார்.

பேருந்து இயல்பாகவே இருப்பதாகவும், எந்தக் காரணமும் இல்லாமல் பேருந்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார் எனத் தெரிவித்து, சாரதியை பணிநீக்கம் செய்து கடிதம் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X