Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 மார்ச் 14 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தரப் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
மேலும் பா.ஜ.கவை எதிர்த்து போட்டியிட்ட அகிலேஷ் யாதவ்வின் ‘சமாஜ்வாடி கட்சியானது‘ எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.
இந்நிலையில் பா.ஜ.கவின் வெற்றியால் மனமுடைந்த மூன்று சகோதரர்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது.
இதனையடுத்து இது குறித்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் இச்செய்தியானது உண்மையில்லை எனத் தெரியவந்துள்ளது.
மேலும் இப் புகைப்படங்கள் கடந்த 2020ஆம் ஆண்டு எடுக்கப்பட்டவை எனவும், இறந்தவர்களுக்கும் உத்தரப்பிரதேச அரசியல் கட்சிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இதுபோன்ற பொய்யான செய்திகளைப் பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago
5 hours ago