2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

பாக். தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டமா?

Editorial   / 2025 ஏப்ரல் 25 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவம் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவும் நிலையில், புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஒருவர், வியாழக்கிழமை (24) கேக் பாக்ஸுடன் சென்றார். இந்த வீடியோ வைரலாக பரவியது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பதிலுக்கு பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக கட்டிடத்துக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு வியாழக்கிழமையுடன் அகற்றப்பட்டது. இரு நாடுகள் இடையே பதற்றமான சூழல் நிலவும், நிலையில் புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்குள் ஊழியர் ஒருவர் கேக் பெட்டியுடன்சென்றார்.

அவரிடம் எதற்காக கேக் கொண்டு செல்லப்படுகிறது என நிருபர்கள் கேட்டனர். அதற்கு அந்த ஊழியர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்த வீடியோ   வைரலாக பரவியது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X