Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Freelancer / 2025 மே 05 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீர் நிறுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாக்லிஹார் அணையில் இருந்து பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், செனாப் நதியின் வழித்தடம் நீரின்றி காய்ந்து காணப்படுகிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஜீலம் நதியிலிருந்தும் நிறுத்தம்
இதேபோல், ஜீலம் நதியில் உள்ள கிஷன்கங்கா அணையில் இருந்தும் பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்வது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜமியத் உலமா-இ-ஹிந்த்-ன் தலைவர் அர்ஷத் மதானி, சிந்து நதி நீர் நிறுத்தத்துக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். ஜமியத் உலமா-இ-ஹிந்த் தலைவர் அர்ஷத் மதானியின் கருத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago