2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

பாஜக கட்டுப்பாட்டில் ரஜினி இல்லை

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 19 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாஜக கட்டுப்பாட்டில் ரஜினி இல்லை; எப்போதும் இருந்ததில்லை என பாஜக தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

காரைக்குடியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாஜக கட்டுப்பாட்டில் ரஜினி இல்லை. எம்ஜிஆரின் விசுவாசியாகச் செயல்படாத கமல்ஹாசனுக்கு எம்ஜிஆரின் ஆட்சியைக் கொண்டு வருவேன் என்று கூறுவதற்கு உரிமை இல்லை.

சினிமாவில் ஆபாசமாக நடித்து கலாசாரத்தைக் கெடுத்த கமல் அரசியலுக்கு வரும்போது, ரஜினி வருவதில் எந்தத் தவறும் இல்லை.

ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் திமுகவில் உறுப்பினர்களாக உள்ளனர். ரஜினி கட்சி தொடங்கி னால் அவரது கட்சிக்கு திமுகவிலிருந்து ஏராளமானோர் சென்றுவிடுவர்.

இது திமுகவுக்கு பலவீனம். சமையல் எரிவாயு விலை ஏற்றம் தற்காலிகமானதுதான். அரசியல் நாகரிகமற்றவர் போல் ப.சிதம்பரம் செயல்படுகிறார் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .