2026 மார்ச் 07, சனிக்கிழமை

பாஜகவுக்கு தலைவலியாக பத்றுதீன் அஜ்மல் திருப்பம்

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 08 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

   

திஸ்பூர்;

அசாமில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎப்) கட்சியின் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான பத்றுதீன் அஜ்மல் பாஜகவுக்கு புதிய தலைவலியாக உருவெடுத்திருக்கிறார்.

தென் மாநிலங்களில் முஸ்லிம்களிடம் கணிசமாக தனது செல்வாக்கை பெருக்கிக் கொண்டுள்ள ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி போல வடகிழக்கு மாநிலங்களில் பெங்காலி மொழி பேசும் முஸ்லிம்களிடையே பிரபலமாகி வருகிறார் பத்றுதீன் அஜ்மல்.

அசாமில் இந்திய முஸ்லிம்களைத் தவிர பெங்காலி மொழி பேசும் முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனர். பல  தொகுதிகளில் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு உள்ளனர். பெங்காலி மொழி பேசும் முஸ்லிமான பத்றுதீன் அஜ்மலுக்கு அவர்களிடையே நல்ல செல்வாக்கு உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .