A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 20 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி;
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கின் கீழ், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பாரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி சொத்துக்களை அமுலாக்கப்பிரிவு அதிகாரிகள் நேற்று முடக்கினர்.
ஜம்மு காஷ்மீரில் மாவட்ட மேம்பாட்டுக் கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடந்து முடிந்தநிலையில் அமுலாக்கப்பிரிவு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் முதல்வராக பாரூக் அப்துல்லா இருந்தபோது, கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பு (பிசிசிஐ) ஜம்மு காஷ்மீர் மாநிலக் கிரிக்கெட் அமைப்புக்கு வழங்கிய நிதியில் ரூ.43.69 கோடி நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கில் விசாரணை நடத்திய சிபிஐ அமைப்பு, முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் பொதுச் செயலாளர் முஹம்மது சலீம் கான், பொருளாளர் அஸன் அஹமது மிர்ஸா, மிர் மன்சூர் காசன்பர் அலி, பசிர் அஹமது மிஸ்கர், குல்சர் அகமது பெய்க் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
சிபிஐ முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக வைத்து அமுலாக்கப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இதில் கடந்த 2005-2006 முதல் 2011 -2012 வரை பிசிசிஐ அமைப்பிடம் 3 விதமான வங்கிக் கணக்கில் ரூ.94.06 கோடியை ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அமைப்பு பெற்றுள்ளது என விசாரணையில் தெரியவந்தது. இந்தப் பணம் கணக்கில் கொண்டு வரப்படவில்லை.
31 minute ago
4 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
4 hours ago
07 Mar 2026