2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பாலத்தில் பயணித்த 15 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2023 மே 09 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாலத்தில் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 மத்திய பிரதேசத்தில் கார்கோனில் உள்ள பாலத்திலேயே குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று இடம்பெற்ற இக்கொடூர விபத்தில்  15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் 25 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய்  நிவாரணமாக  வழங்க மத்திய பிரதேச முதலமைச்சர்  சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X