A.K.M. Ramzy / 2021 ஜனவரி 05 , மு.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன்னேரி;
பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்ற உறவினரை கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு, இளம்பெண் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள அல்லிமேடு பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண், அல்லிமேடு பகுதியிலுள்ள குதிரை பண்ணை அருகே இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது, அந்த பெண்ணின் உறவினரான அஜித் என்ற கிளி அஜித்(25) மதுபோதையில், பின்தொடர்ந்து சென்று,கத்தியைக் காட்டி மிரட்டி தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த பெண், அஜித்தை பலமாக தள்ளியதில், பின்னால் இருந்த பனை மரத்தில் மோதி கீழே விழுந்தார்.
தொடர்ந்து, தன்னை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில், அஜித்திடம் இருந்து பறித்த கத்தியால் அவரது கழுத்தில் பலமாக வெட்டியுள்ளார்.
இதில், அஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், அந்த பெண் சோழவரம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
14 minute ago
33 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
33 minute ago
49 minute ago