2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பின்னோக்கிச் செலுத்தும் மனிதர்

Ilango Bharathy   / 2023 மார்ச் 14 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மகாராஷ்டிரா மாநிலம், புனேவைச் சேர்ந்த  ‘சந்தோஷ் ராஜெஷிர்கே ‘ என்பவர் காரைப்  பின்னோக்கிச் செலுத்தி வருவதன் மூலம் பிரபலமடைந்து வருகின்றார்.

கடந்த  2018ஆம் ஆண்டு இவ்விநோத பயணத்தை ஆரம்பித்த இவர், இதுவரை  11 மாநிலங்கள் வழியாக 6,000 கிலோமீற்றர்களைக் கடந்துள்ளார்  எனக் கூறப்படுகின்றது. மேலும் சராசரியாக 45 கிலோமீற்றர் வேகத்தில் பின்னோக்கிப் பயணிக்கும் இவர், இப்பயணத்திற்காகக் குறித்த  காரில் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு தனது காரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புனே முதல் ராய்கர் வரை 180 கிலோமீற்றர்  பின்னோக்கிப்  பயணம் செய்ய வேண்டிருந்ததாகவும், இதன்போது வாகனத்தை பின்னோக்கிச் செலுத்துவதில் ஆர்வம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் "இப்படி பயணம் செய்யும் போது மற்ற ஓட்டுநர்கள் மீது மோதாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .