2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பிபிசிக்கு 10,000 கோடி அபராதம்?

Ilango Bharathy   / 2023 மே 24 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரதமர் மோடி பற்றிய ஆவணப்படத்தைத் தயாரித்த பிரபல செய்தி ஊடகமான  பிபிசிக்கு  10,000 கோடி ரூபாய் கேட்டு அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் சார்பில் இந்த வழக்கு பதிவாகியுள்ளது. பிரதமர் மோடியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க எடுக்கப்பட்டதாக அந்தப் படம் மீது மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

பிபிசி தயாரித்த அந்தத் திரைப்படம் மத்திய அரசிடமிருந்து கடும் எதிர்ப்பை சந்தித்தது. காலனிய மனநிலையுடன் தயாரிக்கப்பட்ட படம் என்று சர்ச்சைகள் எழுந்தன.

 இதனிடையே டெல்லி உயர் நீதிமன்றம் ஆவணப்படம் தொடர்பான வழக்கில் பதில் அளிக்க பிபிசிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X