A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 04 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
டில்லி:
பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை சீனா உளவு பார்த்தது குறித்து விசாரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உட்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மிக முக்கிய பொறுப்பில் உள்ளவர்களை உளவு பார்க்கும் பொறுப்பு சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
இந்நிலையில் 'சேவ் தெம் இந்தியா பவுண்டேஷன்' என்ற அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட வி.ஐ.பி.க்களின் தகவல் பரிமாற்றங்களை உளவு பார்க்க சீன அரசு ஒரு நிறுவனத்தை அமர்த்தியுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இது நாட்டின் இறையாண்மை ஒற்றுமை தனி நபர் உரிமை ஆகியவற்றுக்கு எதிரான செயலாகும்.
சீனா இந்தியாவை உளவு பார்ப்பது புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் ஆகியோரின் தகவல்களை திருடுவது கவலை அளிக்கிறது. இந்த விவகாரம் குறித்து விசாரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு 'மனுதாரர் இங்கு முறையிடுவதற்கு முன் மத்திய உள்துறை அமைச்சகம் அல்லது நிதியமைச்சகத்திடம் தெரிவித்திருக்க வேண்டும்.
எனவே இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது' என உத்தரவிட்டது. இதையடுத்து மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷால் திவாரி மனுவை 'வாபஸ்' பெறுவதாக தெரிவித்தார்.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago