Ilango Bharathy / 2022 ஏப்ரல் 02 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியப் பிரதமர் மோடிக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு அலுவலகத்திற்கு மர்ம நபர் ஒருவர் அனுப்பிய மின்னஞ்சலிலேயே இக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மின்னஞ்சலில் ”பிரதமர் மோடியைக் கொலை செய்ய 20 ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர் எனவும், அவர்களிடம் 20 கிலோகிராம் ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்து உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ் விவகாரம் தொடர்பாக மூன்று பேரைத் தீவிரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளதுடன் மேலும் 5 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
13 minute ago
16 minute ago
25 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
16 minute ago
25 minute ago
2 hours ago