2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சந்திக்கிறார்

A.K.M. Ramzy   / 2021 ஜூன் 17 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை 

 தமிழக  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்.

தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின் முதன்முறையாக இன்று காலை 7.30 மணியளவில் ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் சென்றார். சிறப்பு விமானம் மூலமாக டெல்லி செல்லும் அவர், இன்று காலை டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார். டெல்லியில் கட்டப்பட்டு வரும் திராவிட முன்னேற்றக் கட்சியின் அலுவலகத்தையும் அவர் பார்வையிடுவார்.

இன்று மாலை 5 மணியளவில் பிரதமர் மோடியை  முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேச உள்ளார். மோடியிடம் தமிழகத்துக்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி தேவை , நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும், செங்கல்பட்டில் கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கு அனுமதி போன்ற கோரிக்கைகளை முன் வைப்பார் என்று நம்பப்படுகிறது. பிரதமர் சந்திப்பிற்கு பிறகு பத்திரிக்கையாளர்களை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பார்.

அதன்பின் நாளை வெள்ளிக்கிழமை காங்கிரஸ்  தலைவர் சோனியா மற்றும் ராகுலை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .