2025 மே 09, வெள்ளிக்கிழமை

பிரியாணி ’ருசி’யாக இல்லாததால் மோதல்

Mithuna   / 2024 ஜனவரி 02 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐதராபாத் அமிட்சில் பழமை வாய்ந்த பிரபல ஹோட்டல் இயங்கி வருகிறது. இந்த ஹோட்டலில் ஐதராபாத் பிரியாணி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

புத்தாண்டு தினத்தையொட்டி அங்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது வாடிக்கையாளர்கள் கும்பலாக பிரியாணி சாப்பிட வந்துள்ளனர். அவர்களுக்கு பரிமாறப்பட்ட பிரியாணி சூடாக இல்லை. மேலும் ருசியாகவும் இல்லை என வாடிக்கையாளர் ஒருவர் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கும் ஹோட்டல் ஊழியர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் திடீரென அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது ஹோட்டல் ஊழியர்கள் உருட்டு கட்டைகளை எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர்களை தாக்கினர்.

மேலும் கதிரைகளை தூக்கி அவர்கள் மீது வீசினர். இதனைக் கண்ட பொதுமக்கள் ஹோட்டலில் இருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இருதரப்பினரையும் பொலிஸ் நிலையம் அனைத்து சென்று விசாரித்தனர்.

இது தொடர்பாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்:

“பிரியாணி சூடாக இல்லை என்றதால் இந்த பிரச்சனை நடந்துள்ளது.முதலில் வாடிக்கையாளர் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது திடீரென இந்த வாடிக்கையாளர் ஹோட்டல் ஊழியரை தாக்கியதால் நிலைமை மோசமாகியுள்ளது. இது தொடர்பாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X