A.K.M. Ramzy / 2021 மார்ச் 17 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய தே.மு.தி.க. டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அ.ம.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இந்த நிலையில் கோயம்பேட்டிலுள்ள தே.மு.தி.க. அலுவலகத்துக்குச் சென்ற டி.டி.வி.தினகரன், விஜயகாந்தை சந்தித்து பேசினார். அப்போது அவர் விஜயகாந்துக்கு பூங்கொத்து கொடுத்தார்.
இந்த சந்திப்பின்போது தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பின்னர் தே.மு.தி.க. அலுவலகத்தில் வைத்து தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக மக்களின் நலனுக்காகவே அ.ம.மு.க.- தே.மு.தி.க. கூட்டணி உருவாகியுள்ளது. தீயசக்தி தி.மு.க.வையும், துரோக கட்சி அ.தி.மு.க.வையும் வீழ்த்துவதே எங்கள் நோக்கமாகும். கூட்டணிக்காக தே.மு.தி.க.வை தேடிச்சென்று பேசியதில் தவறு ஏதும் இல்லை. நடைமுறைக்கு சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அ.தி.மு.க. அறிவித்துள்ளது.
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago