Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 மே 23 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிளாஸ்டிக் கவர் கழிவுகளில் இருந்து பெட்ரோல் தயாரிக்கும் முயற்சியில் பழனியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் கார்த்திக் பழனி வெற்றி பெற்றுள்ளார்.
வேதியியல் பிரிவில் முதுகலை இறுதி ஆண்டு படித்து வரும் இவர் கடந்த 2 ஆண்டுகளாக பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து வாகன எரிபொருள் தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டு வந்தார். இந்த முயற்சியில் அவர் தற்போது வெற்றி அடைந்துள்ளார்.
ஒரு கிலோ கிராம் அளவிலான பிளாஸ்டிக் கவர்களை எரிப்பதன் மூலம் 300 மில்லி லீட்டர் பைராலிஸிஸ் பெட்ரோல் கிடைப்பதாகவும் இதில் 10 சதவீதம் அப்ஸலுட்டில்லி ஆல்காஹாலை சேர்த்தால் வாகன எரிபொருளாக பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார். ஒரு லிட்டருக்கு 58 கிலோ மிட்டர் வரை வாகனம் இயங்கும் என்றும் எஞ்சினுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் கூறினார்.
பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதன் மூலம் வரும் எரிவாயுவை சமையலுக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை எரித்து அதன் மூலம் இறுதியாக கிடைக்கும் கழிவுகளை சாலை அமைப்பதற்கும் கொன்க்ரீட் போடுவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கார்த்திக் தெரிவித்தார்.பிளாஸ்டிக் கவர் கழிவுகளில் இருந்து எடுக்கும் பெட்ரோல் மூலம் மாணவன், தனது இரு சக்கர வாகனத்தை இயக்குவது அப்பகுதியினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
39 minute ago
1 hours ago
2 hours ago
29 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
2 hours ago
29 Jul 2025