2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

புதுச்சேரியில் திடீர் சர்ச்சை

A.K.M. Ramzy   / 2021 ஜூன் 29 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுச்சேரி

மத்திய அரசாங்கத்தை, 'ஒன்றிய அரசாங்கம்' என, தமிழகத்தின் திராவிட முன்னேற்ற கழக (தி.மு.க.) அரசாங்கமும் அமைச்சர்களும் குறிப்பிட்டு வருகின்றனர். இதற்கு, தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி, பெரும் விவாதமாக மாறி விட்டது.

மத்திய அரசாங்கத்தை, ஒன்றிய அரசாங்கம் என குறிப்பிடுவதை, தமிழக பாரதிய ஜனதா (பா.ஜ.)  தலைவர்களும், புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமியும் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி அமைச்சர்கள், 'இந்திய ஒன்றியத்தின்' என குறிப்பிட்டு, பதவி ஏற்றது, திடீர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர்  தமிழிசை சவுந்தரராஜன் தான், இப்படி கூற வைத்து, பதவி ஏற்க செய்துள்ளார் என்பதால், மொத்த எதிர்ப்பும் அவரை நோக்கி திரும்பியுள்ளது.

உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து, தமிழிசை அளித்த சிறப்பு பேட்டியில், புதுச்சேரியில் புதிய அரசாங்கம்  அமைந்து, வெகு நாட்களுக்கு பின், புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடந்தது. பதவியேற்பு விழாவில், எதைக்கூறி உறுதிமொழி ஏற்பது என்பது குறித்து, பழைய குறிப்புகளையும், உறுதியேற்பு ஆவணங்களையும், அதிகாரிகள் கொடுத்தனர்.

 'இந்திய யூனியன் டெரிடரி ஆப் புதுச்சேரி' என்ற ஆங்கில வார்த்தையை, 'இந்திய ஒன்றியத்தின் புதுச்சேரி ஆட்சிப் பரப்பு' என, மொழி பெயர்த்து இருந்தனர். இந்திய அரசாங்கத்தின்  ஆளுகையின் கீழ் இருக்கும், புதுச்சேரி யூனியன் என்பதை குறிக்கும் விதமாக, மொழி பெயர்க்கப்பட்டது சரியாக இருந்ததால், அதை அப்படியே வைத்து, பதவி ஏற்பு விழாவை நடத்த உத்தரவிட்டேன்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X