Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 17 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லி சட்டசபை தேர்தலில், பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில் புதிய முதலமைச்சர் யார் என்பது பெரிய எதிர்பார்ப்பாகவுள்ளது.
புதிய முதலமைச்சர் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரி சுவராஜின் பெயர் ஏற்கெனவே அடிபட்டு வந்தது. ஆனால் அவர் தற்போது மக்களவை உறுப்பினராக இருக்கிறார். இதைப்போல கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஸ்மிரிதி இரானி பெயரும் பேசப்படுகிறது.
இது தவிர, புதுடெல்லி தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் வர்மாவின் பெயரும் பேசப்படுகிறது. இவர்கள் போக, டெல்லி பா.ஜனதா தலைவர் வீரேந்திர சத்சேபா மற்றும் மகளிர் அணி நிர்வாகி ரேகா குப்தா ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன.
இவர்களுக்கு இடையே டெல்லி எம்.பி.யாக இருக்கும் மனோஜ் திவாரியின் பெயரையும் பரிசீலிக்கிறார்கள். இவர்களில் யாராவது ஒருவர்தான் டெல்லியின் புதிய முதலமைச்சராக வர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி இறுதி முடிவு எடுப்பது பிரதமர் மோடியாகத்தான் இருக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, முதலமைச்சர யார் என்பதை முடிவு செய்ய கட்சியின் சட்டமனறக்குழு கூட்டம் திங்கட்கிழமை (17) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (18) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எனவே, செவ்வாய்க்கிழமை (18) புதிய முதலமைச்ஞர்யார் என முடிவு செய்யப்பட்டு 20ஆம் திகதி பதவி ஏற்பு விழா நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி முதலமைச்சர் பதவியை பிடிக்க முக்கிய தலைவர்கள் இடையே போட்டா போட்டி நிலவுவதால், பாஜக மேலிடம் முடிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக,அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .