2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புதைத்ததை எதிர்த்ததால் உயிருடன் மீண்ட சிசு

Freelancer   / 2022 மே 25 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்கூத் கிராமம்., ஜம்மு மற்றும் காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் பனிஹால் நகரிலிருந்து 3 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது. அங்குள்ள ஷமீமா பேகம், நேற்றுமுன்தினம் காலை பெண் குழந்தையை பிரசவித்துள்ளார்.

எனினும், சிசு இறந்துவிட்டதென கூறிய மருத்துவ​மனை நிர்வாகம், இரண்டு மணிநேரம் தாமதத்தின் பின்னர், சிசுவின் சடலத்தை கையளித்துள்ளனர். உறவினர்களும் சடலத்தை கிராமத்துக்கு எடுத்துச் சென்று புதைத்துள்ளனர்.

எனினும், அந்தப் பகுதியிலுள்ள உள்ளூர்வாசிகள் தங்களது இடத்தில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குழந்தையை அதன் பூர்வீக பகுதியில் புதைக்கும்படி கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வாக்குவாதத்தின் பின்னர், ஒரு மணிநேரம் கழித்து,  புதைத்திருந்த குழந்தையை குடும்பத்தினர் வெளியே எடுத்துள்ளனர்.

இதில், ஆச்சரியப்படும் வகையில் அந்த பெண் குழந்தை உயிருடன் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு ஓடி சென்றுள்ளனர். மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக குடும்பத்தினரும் மற்றவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

 உள்ளூர்வாசிகள் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் விட்டிருந்தால், குழந்தையின் கதி தெரியாம​லே போயிருக்கும். “கெட்டதிலும் ஒரு நல்லது” என்ற வகையில் நடந்த இச்சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .