2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

’புருஷன் யார்’ வனிதாவின் சர்ச்சை

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 08 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை:  

நெற்றியில் குங்குமம் வைத்தால் 'புருஷன் யார்'  என்று கேட்கிறார்கள் என நடிகை வனிதா விஜயகுமார்   கொந்தளித்துள்ளார்.

நடிகை வனிதா விஜயக்குமார் என்றாலே சர்ச்சைதான் என்றாகி விட்டது. எங்கு சென்றாலும் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் ஒரு பிரச்சினை ஆகி விடுகிறது.

அண்மையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா சக போட்டியாளர்களுடன் எப்போதும் சண்டை சச்சரவு என இருந்து வந்தார்.

இதனால், ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார் நடிகை வனிதா. இருப்பினும் இதனை தொடர்ந்து பல்வேறு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது வனிதாவுக்கு. அதனைத் தொடர்ந்து வனிதா விஜயகுமாருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. படங்களில் பிஸியாக உள்ள வனிதா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்நிலையில் கடந்த வாரம் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த வனிதா விஜயகுமார் சிரேஷ்ட  நடிகை ஒருவர் தன்னை அவமானப்படுத்திவிட்டதாகவும், வேலை செய்யும் இடத்தில் துன்புறுத்தல் இருப்பதாகவும் கூறினார்.

 சமூக வலைதளங்களில் தவறாக கருத்துகளைப் பதிவிடுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த வனிதா, நான் நெற்றியில் குங்குமம் வைத்து நின்றால் யார் கணவன் என கேட்கிறார்கள் என கொந்தளித்தார்.

அறிவே இல்லாமல் கேள்வி கேட்கிறார்கள். அந்த மாதிரியான சூழல்தான் தற்போது நிலவி வருகிறது என்றும் நடிகை வனிதா தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X