2024 மே 04, சனிக்கிழமை

புளியோதரையில் இறைச்சித்துண்டுகள்

Mayu   / 2024 பெப்ரவரி 11 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் நந்தியாலா மாவட்டம், ஸ்ரீசைலம் மலையில் பிரசித்தி பெற்ற பிரம்ம ராம்பா சமேத மல்லிகார்ஜூன கோவிலொன்று உள்ளது.

இதில், 12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர்.

சாமி தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதமாக புளியோதரை வழங்கப்படுகிறது.

இதற்கமைய, ஐதராபாத்தை சேர்ந்த குடும்பத்தினர் ஸ்ரீசைலம் கோவிலுக்கு சென்று கோவிலில் வழங்கப்பட்ட புளியோதரையை வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்த நிலையில் கடினமான பொருள் சிக்கியுள்ளது அதனை எடுத்துப் பார்த்த போது எலும்பு துண்டுகள் சில சிக்கியுள்ளன.
மேலும் புளியோதரையில் இறைச்சி துண்டுகள் இருந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர்.

இதற்கமைய, கோவில் புளியோதரையில் இறைச்சி துண்டு எப்படி வந்தது என கோவிலில் சமையல் செய்யும் ஊழியர்களிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .