2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோள் புதன்கிழமை ஏவல்

Shanmugan Murugavel   / 2025 ஜூலை 28 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புவி கண்​காணிப்​புக்​காக நாஸாவுடன் இணைந்து இஸ்ரோ உரு​வாக்​கிய செயற்​கைக்​கோள் புதன்கிழமை (30) திகதி விண்​ணில் செலுத்​தப்​படும் என்று இஸ்ரோ தலை​வர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

 இந்தியாவின் முன்​னாள் குடியரசுத் தலை​வர் அப்​துல்​ கலாமின் 10ஆவது ஆண்டு நினைவு தினத்​தையொட்டி ராமேஸ்வரத்​தில் கலாம் நினைவு கருத்​தரங்​கம் ஞாயிற்றுக்கிழமை (27) நடை​பெற்​றபோதே மேற்படி கருத்தை நாராயணன் வெளிப்படுத்தினார்.

நாராயணன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “சந்​திரனுக்கு விண்கலத்தை அனுப்​பும் அளவுக்கு இஸ்ரோ பிரம்​மாண்​ட​மாக வளர்ச்சி அடைந்​துள்​ளது. 35 கிலோ கிராம் ரொக்​கெட்​டில் தொடங்கி 75 ஆயிரம் கிலோ கிராம் எடை கொண்ட ராக்​கெட்டை விண்​வெளிக்கு அனுப்​பும் வல்லமை​யைப் பெற்​றுள்​ளது.

இஸ்ரோ நடப்​பாண்டு 12 றொக்​கெட்டு​களை விண்​ணில் ஏவ உள்​ளது. ரோபோவுடன் கூடிய ககன்​யான் ஜி-1 ஆளில்லா செயற்​கைக்​கோளை டிசெம்பரில் அனுப்ப திட்​ட​மிட்​டுள்​ளோம். இந்​திய விண்​வெளி வீரரை றொக்​கெட் மூலம் விண்​ணுக்கு அனுப்​பி, மீண்​டும் பூமிக்கு அழைத்து வரும் ஆராய்ச்​சிகளை இஸ்ரோ முடித்​துள்​ளது. அப்​துல் கலாம் கூறியது​போல இந்​தியா தனது 100ஆவது சுதந்​திர ஆண்​டில் (2047-ல்) வல்​லர​சாக மாறும். அப்​போது விண்​வெளி​யில் இஸ்ரோ உதா​ரணச் சான்​றாக மாறும்” என்று கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X