Editorial / 2025 ஜனவரி 09 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

உரிமைக்குரல் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் நலிவுற்றோர் நல அறக்கட்டளையின் தலைவர் சேவா ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் ரவியின் ஏற்பாட்டில், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 37வது நினைவேந்தல் நிகழ்வு கர்நாடக மாநிலம் பெங்ளுரில் நடைபெற்றது.
பெங்களுர் தமிழ்ச் சங்க திருவள்ளுவர் அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மகத்தான ஆளுமையாளர்கள் சிலருக்கு புரட்சித் தலைவரின் நினைவாக கேடயங்கள் வழங்கப்பட்டது.
டாக்டர் ஹனீஷா காடூன், பெங்களுர் தொழிலதிபர் ஆர்.ஸ்ரீநிவாசன், ஊடகவியலாளர் மணி ஸ்ரீகாந்தன், நாகர்கோவில் சுஷ்ருஷா மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் ஆர்.மோகன்தாஸ் ஆகியோருக்கு உரிமைக்குரல் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் நலிவுற்றோர் நல அறக்கட்டளையின் உறுப்பினர்கள் நினைவு கேடயங்களை வழங்கினார்கள்.
இந்த நிகழ்வினை புதிய வானம் மக்கள் நல அறக்கட்டளையின் சர்வதேச அமைப்பாளர் காஞ்சிபுரம் தியாகராஜன் தொகுத்து வழங்கினார்.
நிகழ்வில், சென்னை சண்முகப்ரியன் இசைக்குழுவினரின் இசைக் கச்சேரி நடைபெற்றது. இதில் எம்.ஜி.ஆரின் திரையிசை கொள்கைப் பாடல்கள் பாடப்பட்டன.

46 minute ago
52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
52 minute ago
2 hours ago