2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

பெட்டை கோழியல்ல: முட்டை கோழி

Editorial   / 2022 ஜூன் 15 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களே! மூக்கில் கையை வைக்கும் அளவுக்கு, கிடுகிடுவென முட்டைகளை போட்டு, கோழியொன்று அதிசயிக்கச் செய்துள்ளது.

கேரளாவில் 6 மணி நேரத்தில் 24 முட்டைகளை போட்டு சின்னு என்ற அதிசய கோழி வைரலாகிவருகிறது.

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே அம்பலப்புழா பகுதியை சார்ந்த பிஜு என்பவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 20-க்கும் மேற்பட்ட bv -380 ரக கோழிகளை வாங்கியுள்ளார்.

அதில் ஒரு கோழி பிஜுவின் மகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இதையடுத்து அவரது மகள் கோழிக்கு சின்னு என்று பெயரிட்டு வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் கோழி தனது காலை தூக்கி நேற்று (14) நடக்க காலில் அடிபட்டிருக்கும் என பிஜு, சின்னு கோழியின் காலில் தைலம் போட்டு விட்டுள்ளார்.

காலை சுமார் 8:30 மணி அளவில் கோழி முதலில் ஒரு முட்டை போட்டுள்ளது. சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து 24  முட்டைகளை போட்டு வீட்டாரையே ஆச்சரியப்படுத்துள்ளது.

இந்த தகவல் அறிந்த பலரும் அதிசய சின்னு கோழியையும் 24 முட்டைகளையும் பார்க்க பிஜுவின் வீட்டில் குவிந்துள்ளனர்.

6 மணி நேரத்தில் 24 முட்டைகளை போட்ட சின்னு கோழி அதிசய கோழி என சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .