A.K.M. Ramzy / 2021 மார்ச் 29 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
ஆ.ராசாவின் கருத்துக்கு நடிகை குஷ்புவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
தி.மு.க.வினர் பெண்களை பற்றி இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசுவது புதிதல்ல. முதல்வரின் தாயை ஆ.ராசா மிகவும் தரம் தாழ்ந்து பேசியிருப்பது வேதனை அளிக்கிறது. கண்டிக்கத்தக்கது. தி.மு.க. வினரிடம் இப்படிப்பட்ட வார்த்தைகளைத்தான் எதிர்பார்க்க முடியும்.
அவர்கள் பார்வையில் பெண்கள் என்றால் அப்படித் தான். கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் லியோனி பெண்களின் இடுப்பை பற்றி மிகவும் தரம் தாழ்ந்து பேசினார்.
உதயநிதி ஸ்டாலினும் மிகவும் மோசமாக பேசி வருகிறார். பெண்களை இவ்வளவு கண்ணியக் குறைவாக பேசும் இவர்கள் தான் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப் போகிறார்களாம்.
இவர்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு என்ன நிலை ஏற்படும் என்பதை எல்லா பெண்களும் யோசிக்க வேண்டும் என்றார்.
45 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
4 hours ago