Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூன் 24 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது மகனுக்கு பார்த்த பெண்ணை தந்தை, தானே ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ராம்பூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சகீல். இவருக்கு திருமணமாகி 6 பிள்ளைகள் இருக்கின்றனர். இவர் தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க பெண் தேடிக்கொண்டிருந்தார். அந்த மகனும் 18 வயதை நிரம்பாத மைனர் என தெரிய வந்திருக்கிறது.
அவனுக்கு ஒரு இடத்தில் பெண் பார்த்து முடிவு செய்துவிட்டார்கள். சகீல் தனது மகனுக்கு பெண் பார்த்து முடிவு செய்த வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். அதில் மகனுடன் திருமணாக இருக்கும் பெண்ணுடன் சகீலுக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டது.
இது அவர்களுக்குள் நெருக்கமான உறவை ஏற்படுத்தியது. வீட்டில் இருந்து கொண்டு அடிக்கடி சகீல் தனது மகனுக்கு பார்த்திருக்கும் பெண்ணுடன் போனில் பேசுவது, வீடியோ காலில் பேசுவது என்று இருந்தார்.
இது குறித்து சகீல் மனைவி சபானா கூறுகையில், ''நாள் முழுவதும் வீடியோ கோலில்தான் இருப்பார். அதனைபார்த்து மற்றவர்களிடம் சொன்னபோது நான் சொன்னதை ஆரம்பத்தில் யாரும் நம்பவில்லை. இதனால் நானும், எனது மகனும் சேர்ந்து ஆதாரங்களை திரட்டினோம். இந்த உறவு தெரிந்து நாங்கள் கேள்வி கேட்ட போது எங்களை எனது கணவர் அடித்தார். மகனுக்கு பார்த்த பெண்ணுடன் தந்தைக்கு தொடர்பு இருப்பதை தெரிந்து கொண்டு எனது மகன் அப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டான்'' என்றார்.
இது குறித்து சகீல் மகன் கூறுகையில்,
எனது பாட்டி மற்றும் தாத்தாவும் எனது தந்தையின் முடிவுக்கு ஆதரவாக இருக்கின்றனர்" என்று குற்றம் சாட்டினார். மேலும் ரூ.2 லட்சம் மற்றும் 17 கிராம் தங்கத்துடன் எனது தந்தை வீட்டை விட்டு ஓடிச்சென்று எனக்கு பார்த்த பெண்ணையே திருமணமும் செய்து கொண்டார்'' என்று குறைபட்டுக்கொண்டார்.
2 hours ago
30 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
30 Aug 2025