2025 ஜூலை 30, புதன்கிழமை

பெற்றோர் பிரித்தனர்; இணைத்தது நீதிமன்று

Freelancer   / 2022 ஜூன் 01 , பி.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரளாவில்,  பெற்றோர்களால் பிரிக்கப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்களான இரு பெண்களை அம்மாநில உயர் நீதிமன்றம் இணைத்து வைத்து உத்தரவிட்டுள்ளது. .

பாடசாலையில் படிக்கும் போது இரு பெண்கள்  தோழிகள் ஆகினர். ஒருகட்டத்தில் இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பது தெரியவந்தது. இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  அதிலொரு பெண் வீட்டை விட்டு வெளியேறினார். இதனையறிந்த மற்றைய பெண்ணின் பெற்றோர் அப்பெண்ணை மறைத்து வைத்தனர். 

இந்நிலையில், வீட்டைவிட்டு வெளியேறியிருந்த பெண்,  கேரள உயர் நீதிமன்றத்தில் ஆள் கொணர்வு மனுவொன்றை தாக்கல் செய்தார். இந்த மனு  நேற்றுமுன்தினம் (31) விசாரணைக்கு வந்தது.  
தங்களுடைய மகளை மறைத்து வைத்திருந்த பெற்றோர்,  அப்பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது தன் தோழியுடன் இணைந்து வாழ்வதையே விரும்புவதாக அந்த பெண் தெரிவித்தார்.

இதனையடுத்து, இருவரும் 18 வயதை கடந்தவர்கள் என்ற காரணத்தினால்,  இருவரையும் சேர்ந்து வாழ நீதிமன்றம் அனுமதித்தமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .