2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

’பேய்கள் என்னை அழைக்கின்றன’உயிரை மாய்த்த தொழிலாளி

R.Tharaniya   / 2025 ஜூன் 12 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

குமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு காடேற்றி பகுதியை சேர்ந்த இசக்கி முத்துக்குமார் (33), வெல்டிங் வேலை செய்து வருகின்றனர்.

திருமணமாகாத இவர் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (10) அன்று காலையில் வெகு நேரமாகியும் இசக்கி முத்துக்குமார் வீட்டு அறையில் இருந்து வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரது அறை கதவை வெகுநேரமாக தட்டினர். ஆனால் உள்ளே இருந்து எந்த ஒரு சத்தமும் வரவில்லை. உடனே கதவை உடைத்து கொண்டு சென்றனர். 

அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இசக்கி முத்துக்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

அவருடைய உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.பின்னர் இதுகுறித்து இரணியல் பொலிஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இதை தொடர்ந்து வீட்டில் நடத்திய சோதனையில் இசக்கி முத்துகுமார் தற்கொலை செய்து கொள்ளும் முன்பு எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது.

அதில்," தன்னை 2 பேய்கள் அழைப்பதாகவும், ஆகவே தான் செல்கிறேன்"என்று வாசகங்கள் சுருக்கமாக எழுதப்பட்டிருந்தது. தற்கொலை செய்து கொண்ட இசக்கி முத்துக்குமார் மது பழக்கத்திற்கு அடிமையான தாகவும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இதுதொடர்பாக வழக்கு விசாரணைகள் நடந்து வருகின்றது.பேய்கள் அழைப்பதாக சுருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு வெல்டிங் தொழிலாளி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .