2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் அதிகாரியைச் செருப்பால் தாக்கிய பெண்

Ilango Bharathy   / 2023 ஜனவரி 22 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொலிஸ் அதிகாரியொருவரை பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பெண் அரசிய பிரமுகர் ஒருவர் செருப்பால் தாக்கிய சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்னா மாவட்டத்தில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டப்படுவதாக வந்த தகவலை அடுத்துபொலிஸாரும் , வருவாய்துறையினரும் அங்கு சோதனை நடத்தச் சென்றனர்.

அப்போது அங்கு வந்த நகராட்சித் தலைவரான ‘சாதனா படேல்‘ என்பவர் பொலிஸாரின் விசாரணையில் திருப்தி இல்லை என்று கூறி, அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் கட்சியினர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தினர். இதன்போது சாதனாவும் தனது செருப்பினால் பொலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கியுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண் தலைவர் உட்பல 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .