2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

போபால் ஜாமியா மசூதிக்கும் சிக்கல்

Freelancer   / 2022 மே 23 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய பிரதேசத்தின் தலைநகரான போபாலில் உள்ள ஜாமியா மசூதி,  சிவன் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதாக குற்றஞ்சாட்டும் இந்து அமைப்புகள்,  நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் திட்டமிட்டுள்ளன.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கடந்த 2019 ஆம் ஆண்டில் ராமர் கோயில் பிரச்சினை முடிவுக்கு வந்ததை அடுத்து,  மேன்முறையீட்டு மனுவில் இந்துதரப்பினருக்கு கோயிலை நிர்மாணிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பின்போது, மத்திய அரசின் வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991ன்படி , இதரவரலாற்றுக்காலப் புனிதத் தலங்கள் உள்ள நிலையிலேயே எந்த மாற்றம் இன்றி தொடரும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் , வாரணாசி காசிவிஸ்வநாதர் கோயில் அருகிலுள்ள கியான்வாபி மசூதி, கோயிலை இடித்துக் கட்டப்பட்டுள்ளது என்று சர்ச்சை எழுந்துள்ளது.
 
இதுதொடர்பாக நீதிமன்ற உத்தரவின்படி கள ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் , மதுராவின் ஷாயி ஈத்கா உள்ளிட்டப் பல மசூதிகள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் , மத்தியப் பிரதேசத்தின் போபாலிலுள்ள,  ஜாமியா மசூதிக்கு சிக்கல் உருவாகி விட்டது. 

இது கடந்த 19ஆம் நூற்றாண்டில் போபாலின் முதல் பெண் நவாபான குத்துஸியா பேகம் என்பவரால் , 1832முதல் 1857-ம் ஆண்டிற்கு இடையே கட்டப்பட்டது. அப்போது ,  அங்கிருந்த சிவன் கோயிலை இடித்து கட்டியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .