A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 02 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யவத்மால்:
மஹாராஷ்டிரா மாநிலம் யவத்மாலில் 5 வயதுக்குட்பட்ட 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்குப் பதில்(தவறுதலாக) சானிடைசர் திரவம் அளிக்கப்பட்டதில் அவர்கள் பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தியா முழுவதும் போலியோ சொட்டு மருந்து போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான தேசிய போலியோ நோய்த்தடுப்பு இயக்கத்தை ஜனவரி 30ஆம் திகதியன்று ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆரம்பித்து வைத்தார். கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா போலியோ இல்லாத நாடாக உள்ளது. நாட்டிற்குள்மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதனால் விழிப்புடன் ஆண்டு தோறும் தடுப்பூசி இயக்கத்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் திங்களன்று மஹா., மாநிலம் யவத்மாலில் 5 வயதுக்கு உட்பட்ட 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துக்கு பதில் கைகழுவ பயன்படுத்தப்படும் சானிடைசர் திரவத்தை அலட்சியத்துடன் வழங்கியுள்ளனர். இதனால் குழந்தைகளுக்கு வாந்தி, வயிறு கோளாறு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சுகாதார பணியாளர், மருத்துவர் மற்றும் ஆஷா பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago