Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூன் 11 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆன்லைன் கேம் ஆடியதை கண்டித்த தாயை, அவரது மகன் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், யமுனாபுரம் காலனியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் எந்த நேரமும் ஆன்லைனில் பப்ஜி கேம் ஆடுவதையே வழக்கமாக கொண்டிருந்துள்ளான். பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாகியுள்ள அந்த சிறுவனை அவரது தாய் சில தினங்களுக்கு கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுவன், அவரது தாயை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளான். தனது கொலைக் குற்றத்தை மறைக்க, இறந்த தாயின் உடலை ஒரு அறையில் மறைத்து வைத்துள்ளான்.
இரண்டு நாட்கள் கழித்து உடம்பில் இருந்து துர்நாற்றம் வரவே, நடந்த சம்பவத்தை மேற்கு வங்கத்தில் உள்ள தன் தந்தைக்கு சிறுவன் தொலைபேசியில் தகவலாக தெரிவித்துள்ளான்.
இதையடுத்து தகவலறிந்து வந்த பொலிஸார் விசாரித்தபோது, தாயை கொன்றதை சிறுவன் ஒப்புக் கொண்டுள்ளான்.
இச்சம்பவத்தின்போது, சிறுவனின் சகோதரியும் உடன் இருந்துள்ளார். அவரையும் அந்த சிறுவன் மிரட்டி அறையில் அடைத்து வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது.
சிறுவனின் தந்தை மேற்கு வங்க மாநிலத்தில் ராணுவ அதிகாரியாக பணியாற்றிவரும் நிலையில், அவர் வீட்டில் வைத்திருந்த துப்பாக்கியால் தாயை சிறுவன் சுட்டுக் கொன்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தக் கொலை தொடர்பாக பொலிஸார் சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .