2025 மே 02, வெள்ளிக்கிழமை

மகா கும்பமேளா நிகழ்வு நீடிக்கப்படும்?

Freelancer   / 2025 பெப்ரவரி 20 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகா கும்​பமேளா பெப்​ரவரி 26ஆம் திகதிக்கு பிறகும் நீட்​டிக்​கப்​படும் எனப் புரளிகள் கிளம்​பி​யுள்ளன. 

சமூகவலை​தளங்​களி​லும் இந்த நீட்​டிப்பு மீதானத் தகவல்கள் பல்வேறு வகையில் பரவி வருகின்றன.

 இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டிடம் பிரயாக்​ராஜ் மாநகரக் காவல்​துறை​யின் கூடுதல் ஆணையரும் தமிழருமான டாக்​டர்​ என்​.​கொளஞ்சி கூறும்​போது,

“பண்​டிதர்​களால் பஞ்சாங்கம் உள்ளிட்ட பல ஆய்விற்கு பின் முடிவானது பிப்​ரவரி 26 மகா சிவராத்ரி நாளுடன் முடிவடைகிறது. எங்கள் முதல்வர் தலைமை​யிலும், நேரடிக் கண்காணிப்​பிலும் பொது​மக்​களுக்கு பிரச்சினை வராமல் அதிகக் கவனம் செலுத்​தப்​படு​கிறது. 

“அத்துடன், மகா கும்​பமேளா​வினால் பிரயாக்​ராஜ் வாசிகளுக்​கும் எந்த இடையூறும் வராதபடி நடவடிக்கைகள் கடை​பிடிக்​கப்​படு​கின்றன.

“மகா கும்​பமேளா​ பற்றி பரவும் வதந்​தி​களை​யும் உடனடியாக விசா​ரித்து பொது​மக்​களுக்கு தெளிவுபடுத்து​கிறோம். பிரயாக்​ராஜின் ரயில் நிலை​யங்கள் மூடப்​பட்​ட​தாகக் கூறப்​படுவது தவறு. முன் அறிவிப்​பின்றி இதுபோல் எந்த நடவடிக்கைகளும் எடுக்​கப்​பட​வில்லை. 

“கும்​பமேளா நாட்​களில் நடை​பெற்ற தேர்வை தவற​விட்ட சில ​மாணவர்​களுக்கு அவற்றை எழுத வாய்ப்பு அளிக்​க​வும் அறி​விப்பு வெளி​யாகி உள்​ளது” எனத் தெரி​வித்​தார்​.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .