2026 மார்ச் 07, சனிக்கிழமை

’மக்கள் செய்துவிட்டால் நேரடியாக என்னோடு பேசலாம்’

A.K.M. Ramzy   / 2021 மார்ச் 18 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரோடு,

நான் முதலமைச்சர் என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால், அதன்பின்னர் நீங்கள் நேரடியாக என்னோடு பேசலாம். இடைத்தரகர்கள் யாருமின்றி உங்கள் திட்டங்கள் உங்களை வந்து சேரும்.

இவ்வாறு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று ஈரோடு மாவட்டத்தில்  சட்டமன்ற தொகுதிகளில்   பிரசாரம் மேற்கொண்ட போது இவ்வாறு தெரிவித்தார்.  பின்னர் அங்கிருந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட திருநகர்காலனியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார்.

அப்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:-

 புதிய தலைமுறையினரின் வாழ்க்கை மலர நாங்கள் வந்து இருக்கிறோம். நாளைய சரித்திரத்தை மாற்ற வாய்ப்பு கொடுங்கள். நான் தற்போது திரும்பி பார்க்கும்போது பெரிய தலைவர்கள் இல்லை என்ற ஏக்கம் உள்ளது. இதே நிலை தற்போதைய குழந்தைகளுக்கு இருக்கக்கூடாது. மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் பாதி டாஸ்மாக் கடைகளை நாங்கள் மூடுவோம். மது குடிப்பதை விடமுடியாமல் தவிப்பவர்களுக்கு மறுவாழ்வு மையங்களை டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலேயே தொடங்குவோம்.

வீடுக்கு ஒரு கணினி கொடுப்பேன் என்று கூறுகிறேன். அது இலவசம் அல்ல. உங்களுக்கான முதலீடு. அரசுக்கும், மக்களுக்குமான பாலம்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .