Ilango Bharathy / 2023 மே 30 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெருக்கடியான சூழலை எதிர்கொண்ட ஜடேஜா சி.எஸ்.கே அணிக்கு ஒரு வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்தியதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. முடிவில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் படைக்கு வாழ்த்துக்கள் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒரு திட்டத்துடன் தோனி என்ற மனிதனின் கீழ் 5வது ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கேயின் மஞ்சள் படைக்கு வாழ்த்துக்கள்..
இது மிகச் சிறந்த கிரிக்கெட் போட்டி.. இதில் நெருக்கடியான சூழலை எதிர்கொண்ட ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்தினார்." எனப் பதிவிட்டுள்ளார்.
34 minute ago
43 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
43 minute ago
51 minute ago