2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

மணப்பெண்ணின் ஆபாசத்தால் கோடிகளை இழந்த பொறியியலாளர்

Freelancer   / 2023 ஓகஸ்ட் 01 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடகாவின் கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த 41 வயதான ஒரு மென்பொருள் பொறியியலாளர் பிரிட்டனில் வேலை செய்து வந்தார்.

தொழில்முறை பயிற்சிகளுக்காக பெங்களூருவிற்கு வந்திருந்த அவர் திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் ஒரு திருமண வரன் தேடும் வலைதளத்தில் விவரங்களை பதிவு செய்து பொருத்தமான பெண்ணை தேடிவந்துள்ளார்.

திருமண வலைதளம் மூலம் அவருக்கு ஒரு பெண் அறிமுகமானார். பொறியியலாளரை திருமணம் செய்து கொள்ள சம்மதித்த அந்த பெண் தான் தந்தையில்லாமல் தாயுடன் மட்டும் வாழ்வதாக கூறியுள்ளார்.

தாயின் அவசர மருத்துவ தேவைக்காக ரூ.1500 வேண்டும் என பொறியியலாளரிடம்  கேட்டு பெற்று கொண்டார். மீண்டும் ஜூலை 4-ம் திகதி பொறியியலாளருடன்  வீடியோ அழைப்பில் தொடர்பு கொண்டு
பொறியியலாளரின் ஆசையை தூண்டும் விதமாக ஆடையில்லாமல் தோன்றி, அவருடன் ஆபாசமாக உரையாடியுள்ளார்.

 அந்த உரையாடல்களை பொறியியலாளருக்கு தெரியாமல் தனது ஸ்மார்ட்போனில் பதிவு செய்து கொண்டுள்ளார். பிறகு, இந்த பதிவை பொறியியலாளருக்கு அனுப்பி, அவரின் பெற்றோருக்கு அனுப்பாமல் இருக்க வேண்டுமென்றால் ஒரு பெரும் தொகை வேண்டும் என கேட்டு அவரை பிளாக்மெயில் செய்துள்ளார்.

இதனையடுத்து அந்த பொறியியலாளர் ரூ.1 கோடிக்கு மேல் அந்த பெண்ணிற்கு அனுப்பியுள்ளார். மொத்த தொகையில் சுமார் ரூ.30 லட்சம் வரை அப்பெண் ஏற்கெனவே செலவழித்து விட்டதாகவும், மீதம் உள்ள சுமார் ரூ.84 லட்சம் மீட்கும் முயற்சியில் அப்பெண்ணின் வங்கி கணக்கை முடக்கி விட்டதாகவும் ​பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X