Ilango Bharathy / 2022 பெப்ரவரி 27 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
60 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் நாளையும்(28) மார்ச் மாதம் 6 ஆம் திகதியும் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் பயங்கரவாதிகள் நேற்றைய தினம் (26) நடத்திய வெடிகுண்டுத் தாக்குதல்களில் 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரில், சர்ச்சந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள கேங்க் பிமுல் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிலேயே இக்குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் குண்டுவெடிப்பில் குழந்தையொன்று உட்பட 7 பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்துக்கு கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் குண்டுவெடிப்பு சம்பவம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026