2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மது விருந்து வழங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்

Freelancer   / 2025 ஏப்ரல் 20 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை மாணவர்களுக்கு மது விருந்து வழங்கிய ஆசிரியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலம்,  கத்னி அருகே கிர்கானி கிராமத்தை சேர்ந்தவர் லால் நவீன் பிரதாப் சிங் என்பவர், அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 

இந்த நிலையில், பாடசாலையில், வகுப்புக்கு பாடம் எடுக்க வரும்போதெல்லாம் அவர் மதுபோதையிலேயே தொடர்ந்து வந்துள்ளார்.

மேலும் தன்னுடைய மாணவர்களுக்கும் மது போதையின் ருசியை தொடர்ந்து காட்டியுள்ளார்.

இந்நிலையில், பாடசாலை விடுமுறை தினத்தன்று, மாணவர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு மதுபான விருந்து கொடுத்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. வீடியோ வைரலான நிலையில் பாடசாலைக் கல்வித்துறை நிர்வாகம் குறித்த ஆசிரியரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .