2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மத்திய அரசாங்கம் உச்ச நீதிமன்றத்துக்கு அறிவிப்பு

A.K.M. Ramzy   / 2021 ஜூன் 28 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புதுடெல்லி

நாடு முழுதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்தாண்டு இறுதிக்குள் தலா இரண்டு 'டோஸ்' தடுப்பூசிகளை வழங்க தேவையான, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசாங்கம் உச்ச நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

தடுப்பூசி விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசாங்கத்தின் சார்பில் சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலர், 375 பக்கங்கள் உடைய அரசாங்கத்தின் திட்டத்தை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். பரிசோதனை அதில் கூறப்பட்டு உள்ளதாவது: நாடு முழுதும் 18 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கை, 93 - 94 கோடியாக இருக்கும். தலா இரண்டு டோஸ் அளிக்க 186 - 188 கோடி டோஸ் தேவை. ஜூலை 31ஆம் திகதிக்குள் 51.6 கோடி டோஸ் வழங்கப்படும்.

அதன்படி மேலும் 135 கோடி டோஸ் தேவைப்படும்.நம் நாட்டில் ஏற்கனவே இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. இதைத் தவிர, ரஷ்யாவின், 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசியும் தயாரிக்கப்படவுள்ளது. இதைத் தவிர, நம் நாட்டைச் சேர்ந்த 'பயோலாஜிகல் இ மற்றும் ஜைடஸ் காடிலா' நிறுவனங்களின் தடுப்பூசியும் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன. அவற்றின் தயாரிப்பும் விரைவில் ஆரம்பமாகுமென, எதிர்பார்க்கிறோம். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X