2025 மே 07, புதன்கிழமை

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

Freelancer   / 2024 ஜூலை 23 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் திகதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது.

இதன் ஒரு பகுதியாக மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அன்றைய தினம் தாக்கல் செய்தார். கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கும் ஆய்வறிக்கை இதுவாகும்.

இதனையொட்டி 2024-2025 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (23) காலை 11 மணிக்கு தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார்.

முன்னதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார். அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் நகலை குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் அளித்து ஒப்புதலை பெற்றார்.

அதே சமயம் பட்ஜெட் உரையை பெற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டி தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X