2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

மனு கொடுத்த பெண்ணை தலையில் அடித்த அமைச்சர்

Freelancer   / 2022 ஜூலை 13 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


'கோரிக்கையை நிறைவேற்றித்தரக் கேட்டு மனு கொடுத்த பெண்ணை, தமிழக வருவாய் துறை அமைச்சர் தலையில் அடித்து விரட்ட முனைந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது' என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அ.ம.மு.க.இ) பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

ஓர் அமைச்சரே இப்படி நடந்து கொண்டால் மக்கள் எப்படி முன்வந்து ஆட்சியாளர்களிடம் குறைகளைத் தெரிவிப்பார்கள்? திராவிட முன்னேற்ற கழகத்தின் (தி.மு.க) அரசின் அமைச்சர்கள், அதிகாரிகளை சாதிப் பெயர் சொல்லித் திட்டுவதும், மனு கொடுக்க வந்தவர்களை தலையில் அடித்தி விரட்டுவதும் தான் மேடைக்கு மேடை ஸ்டாலின் முழங்கி வரும் திராவிட மாடல் போலும்!?' என்றும் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X