Freelancer / 2023 ஜூன் 12 , பி.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

கடலூர்மாவட்டத்தில் தன் மனைவி விளையாட்டாக கப்பல் போன்ற வீடு தனக்கு வேண்டும் என்று கேட்டதற்காக கப்பல் போன்ற வீட்டினை வடிவமைத்து தந்துள்ளார் . அவரது கணவர் .குறித்த கப்பல் வீடு 4 ஆயிரம் சதுர அடியில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பிரம்மாண்ட கப்பல் போன்று தோற்றம் உள்ள இந்த வீட்டினைச் சுற்றி தண்ணீர் நிற்கும் விதமாக வழிவகை செய்யப்பட்டுள்ளன. வீட்டிற்குள் சென்றவுடன் கப்பலில் இருப்பது போன்று படிக்கட்டுகள் அமைத்து அதன் வழியாக 6 அறைகளைக்கட்டி இந்தவீட்டினை பிரம்மாண்டப்படுத்தி உள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக குறித்த வீட்டினை கட்டும்பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில் தற்போது வீடுகட்டப்பட்டு புதுமனை புகுவிழாவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
34 minute ago
43 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
43 minute ago
51 minute ago