Freelancer / 2022 ஜூன் 26 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெல்லியை சேர்ந்தவர் ராஜேஷ் ஒரு ஐடி என்ஜினீயர் . இவர் தனது காதலி அனுபமா குலாட்டி என்பவரை 1999 இல் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிற்கு சென்றார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, அனுபமா இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.
கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்கள் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினர். நாடு திரும்பியது ராஜேஷ் கொல்கத்தாவில் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி உள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே தொடர்ந்து தகராறு நீடித்து வந்தது.
அனுபமா அமெரிக்காவில் வசிக்கும் ஒருவருடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டதாக அவரது கணவர் சந்தேகித்தார். இதனால் ஒவ்வொரு நாளும் குடும்பத்தில் தகராறு அதிகரித்து கொண்டே வந்தது.
ராஜேஷ் தன்னை ஏமாற்றி வேறு திருமணம் செய்து கொண்டதாக அனுபமா பொலிஸில் புகார் அளித்தார். மேலும் மாதம் ரூ.20,000 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் மனைவியை தீர்த்து கட்ட திட்டமிட்டார். சம்பவத்தன்று கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது ராஜேஷ் மனைவியை கீழே தள்ளிவிட்டு உள்ளார். இதில் அனுபமா மயக்கம் அடைந்தார். அவர் இறந்து விட்டதாக நினைத்தார்.
ஆனால் அவர் மரணமடையவில்லை மயக்கம்தான் அடைந்தார் என்பதை அறிந்ததும் அவரை கொலை செய்யும் திட்டத்தை நிறைவேற்றி உள்ளார். உடனடியாக அவரது மூக்கு மற்றும் வாயில் பஞ்சை திணித்து உள்ளார். இதில் மூச்சு திணறி சிறிது நேரத்தில் அனுபமா உயிரிழந்தார்.
ராஜேஷ் மனைவியின் உடலை எங்கே மறைத்து வைப்பது என தெரியாமல் திணறி உள்ளார். பின்னர் மனைவியின் உடலை 70 துண்டுகளாக வெட்டி அதனை பொலித்தீன் பையில் அடைத்து 2 மாதமாக நகரின் பல பகுதிகளில் வீசி உள்ளார்.

இந்த நிலையில் குழந்தைகள் தயார் குறித்து கேட்டதும் ராஜேஷ் பல்வேறு பொய்களை கூறி சமாளித்து உள்ளார். அனுபமாவின் சகோதரர் சுஜன்குமார் இதுகுறித்து டேராடூன் பொலிஸில் புகார் செய்து உள்ளார். இதனைத்தொடர்ந்து,பொலிஸார் ராஜேஷ் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் பொலிஸார் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியை திறந்து பார்த்தனர். அதைத் திறந்தவுடன், உள்ளே இருந்து கருப்பு பாலிபேக்கில் துண்டிக்கப்பட்ட கை,கால்களும், மனித உடல் உறுப்புகளும் இருந்து உள்ளது.
அதிர்ச்சி அடைந்த பொலிஸார் ராஜேஷிடம் விசாரணை நடத்தியதில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். உள்ளூர் கடையில் கல் வெட்டும் கிரைண்டர் இயந்திரம், டீப் ஃபிரீசர் மற்றும் கருப்பு பாலிபேக்குகள் வாங்கப்பட்டதாக ராஜேஷ் கூறினார்.
இதனையடுத்து, பொலிஸார் அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் டேராடூன் நீதிமன்றத்தால் ராஜேசுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதோடு 15 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

44 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago