2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

மனைவியை சித்திரவதை செய்த கணவன்

Freelancer   / 2022 ஜூன் 08 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தர பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் இளைஞர், தனது மனைவியை அடித்து சித்திரவதை செய்யும் 'வீடியோ' சமூக வலைதளத்தில் பரவி, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

அந்த வீடியோவில்,  ஓர் இளம்பெண் கெஞ்சுகிறார். அந்தப் பெண்ணின் கணவர், மாமியார் மற்றும் ஒரு பெண் ஆகிய மூவரும் சேர்ந்து, அந்த இளம் பெண்ணை சரமாரியாக உதைக்கின்றனர். அவரது முகத்திலும் குத்துகின்றனர். அந்த பெண் கெஞ்சியும் அந்த மூவரும் இரக்கப்படவில்லை. 

இதுகுறித்து பொலிஸார் விசாரித்தனர். அப்போது அந்தப் பெண் பொலிஸாரிடம் கூறியதாவது:

என் கணவரும் அவரது குடும்பத்தினரும் ஆண் குழந்தை பெற்றுத் தர வேண்டும் எனக் கூறினர். ஆனால், எங்களுக்கு அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள் தான் பிறந்தன. அதனால், பெண் குழந்தை பிறந்ததற்கு நான் தான் காரணம் என, என்னைத் தினமும் சித்திரவதை செய்கின்றனர். 

நான் கூலி வேலைக்கு சென்று பணமும் கொடுக்கிறேன். ஆனாலும், எனக்கு மட்டும் உணவு கொடுக்க மாட்டார்கள். பல நாள்கள் பட்டினியால் தவித்துள்ளேன். அடியும், உதையும் தாங்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

பொலிஸார் அந்தப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், பெண்ணின் கணவர், மாமியார், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .