2025 ஜூலை 30, புதன்கிழமை

மனைவியை மறைத்து கணவன் செய்த செயல்

Editorial   / 2022 மே 30 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மனைவியை மகள்களிடம் காண்பிக்காது. தன்னுடைய இரண்டு மகள்களையும் 10ஆம் வகுப்பு கணித பாடப்பரீட்சைக்கு அனுப்பிவைத்த தந்தையின் செயல் கல் மனதையும் கரைய செய்துள்ளது.

 தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வசிக்கும் இவரது மனைவி, ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த கார் மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இறந்த மனைவின் உடல், பிரேத பரிசோதனை அறையில் இருந்தது.    மனதை கல்லாக்கிக் கொண்ட கணவன், பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய மகள்களுக்கு, தாயின் மரண செய்தியை தெரிவிக்கவில்லை. விபத்தில் கால்முறிவு ஏற்பட்டு வைத்தியசாலையில் அம்மா அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியை கூறியுள்ளார்.

 'நீங்கள் இருவரும் நாளை கணித தேர்வை எழுதி முடித்துவிட்டு வந்து, அம்மாவை பாருங்கள்' என, தந்தை கூறியுள்ளார். அன்றிரவு சித்தியின் வீட்டில் தங்கி படித்த இவ்விருவரும் மறுநாள் பரீட்சைக்குத் தோற்றிவிட்டு வீட்டுக்கு வந்தனர்.

அவ்விருவரையும் இடைமறித்த உறவினர்கள், சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்றனர். தாயின் இறந்துவிட்டதை அறிந்து மகள்கள் இருவரும் கதறியழுதனர்.

எனினும், மகள்களின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்ட கணவனை பலரும் பாராட்டினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .