A.K.M. Ramzy / 2021 மார்ச் 08 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொல்கத்தா
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய தோழியும், 4 முறை எம்எல்ஏவாக இருந்தவருமான சோனாலி குஹா பாஜகவில் இணையப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்திலுள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 291 வேட்பாளர்களை திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி வெளியிட்டார். இந்தப் பட்டியலில் 20 அமைச்சர்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.குறிப்பாக நிதியமைச்சர் அமித் மித்ரா, நிலவளத்துறை அமைச்சர் அப்துல் ராஜாக் முல்லா, வேளாண் அமைச்சர் புமேந்து பாசு ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 50 பெண் வேட்பாளர்களுக்கும், 42 முஸ்லிம்களுக்கும் மம்தா இந்த முறை வாய்ப்பு வழங்கியுள்ளார்.
இதில் முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய தோழியாகவும், நெருக்கமானவராகவும் இருப்பவர் சோனாலி குஹா. சத்காச்சியா தொகுதியிலிருந்து 4ஆவது முறையாக எம்எல்ஏவாக சோனாலி குஹா இருக்கிறார். இந்த முறை சோனாலிக்கு இடம் வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்துள்ள சோனாலி குஹா பாஜகவில் இணையத் திட்டமிட்டுள்ளார்.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago