Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2023 மார்ச் 01 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
26 வயதான மருத்துவ மாணவியொருவர் நேற்று முன்தினம் (26) பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழங்குடியினத்தைச் சேர்ந்த `ப்ரீத்தி` என்ற 1 ஆம் ஆண்டு முதுகலை மருத்துவ மாணவியே இவ்வாறு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் பொலிஸாரின் விசாரணையில் குறித்த மாணவி இரண்டாம் ஆண்டு முதுகலை மாணவரான சைஃப் மற்றும் அவரது நண்பர்களால் பகிடி வதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலாலேயே அவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்” எனவும் தெரியவந்துள்ளது.
அத்துடன் ப்ரீத்தியின் தொலைப்பேசியில் ‘சக மாணவியுடன் அவர் தனக்கு நடக்கும் பகிடிவதை குறித்து அனுப்பிய குறுஞ்செய்திகள் ஆதாரமாகக் கிடைத்துள்ளதாகவும், அதில் ப்ரீத்தியை , சைஃப் அதிக நேரம் பணி செய்ய வற்புறுத்தி வந்துள்ளமை தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ப்ரீத்தியின் மரணத்திற்கு நீதி கோரி மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு பழங்குடி அமைப்பினைச் சேர்ந்தவர்கள் பாரிய போராட்டமொன்றை தெலுங்கானாவில் முன்னெடுத்து வருகின்றனர்.
அதே சமயம் ஹைதராபாத் பொலிஸ் நிலையத்தில் ‘சைஃப் ‘ என்ற மாணவன் மீது புகார் அளித்துள்ள ப்ரீத்தியின் குடும்பத்தினர், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து சைஃப்பைக் கைது செய்துள்ள பொலிஸார் இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில், தெலுங்கானா மாநில அரசு ப்ரீத்தியின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், 10 லட்சம் ரூபாயையும் நிவாரணமாக வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago