A.K.M. Ramzy / 2021 ஜனவரி 31 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெங்களூர்:
கொரோனாவில் இருந்து மீண்டதை தொடர்ந்து, சசிகலா, இன்று ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் இருந்து வீடு செல்லவுள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, கடந்த, 27இல், விடுதலை செய்யப்பட்டார்.அதற்கு முன்பே, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இப்போது, கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை. உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் விக்டோரியா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இன்றுடன் சசிகலாவுக்கு 10 நாட்கள் சிகிச்சை நிறைவு பெற்றது. அவருக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை. செயற்கை சுவாசமின்றி சுவாசித்து வருகிறார். வீட்டில் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும் என அவருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
22 minute ago
13 May 2026
13 May 2026
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
13 May 2026
13 May 2026
13 May 2026